Monday, 9 June 2014

நினைவுகளில் நீ

மரணம் எனக்கொரு சந்தர்ப்பத்தை கொடுத்தது 
அதற்குள் மரணித்துப் போவென்றது...
இதெப்படி சாத்தியம் 
நினைவுகளில் நீயிருக்கையில் ...
--------------------------------------------------

என்னை வெற்றிகொள்ள 
வேண்டுமானால் 
நீயும் ஒரு முறை மரணித்துப் 
பார்க்கவேண்டும் ?
------------------------------------------------
மரணம் மிகுந்தச் சுவையுடைதாக இருக்கிறது 
எனை அருந்திச் செல்வாயா நீ ?
-----------------------------------------------------
நீ மௌனம் விதைத்தால் -என் 
மரணம் அறுவடையாகும்.
-----------------------------------------------------
நீ அள்ள அள்ளத் தீராதது 
என் மரணம் மட்டும்தான் 
தீர்ந்துவிடு நீயாக !
-------------------------------------------------
மரணம் என்பது மற்றுமொரு தொடக்கம்.
இனி தீரமாட்டேன் ..
-----------------------------------------------

No comments:

Post a Comment