எனது சிறுவயதில் முதன் முதலில் வந்த டேப் ரெகார்டர் சோனி பெரிய செட் அது .... வந்த புதிதில் எல்லோருக்கும் சந்தோஷம் .... அதன் தலை மேல பொத்தான்கள் இருக்கும் .. வித விதமா இளையராஜா பாட்டு பதிவு செய்றதுக்கு பஸ் புடிச்சு பக்கத்து டவுனுக்கு போவேன் ... எனக்கு ராஜான்னா அப்பா ..அம்மாக்கு பழைய பாடல்கள் ,,, யோசிச்சு ஒரு ஒரு பாட்டா எழுதி ( அப்போவெல்லாம் 60 / 90 நிமிட டேப்ஸ் ) குடுத்துட்டு வந்தா .. ரெண்டு நாளு ஆவும் தம்பின்னு சொல்லிடுவாரு பாய் .... "அண்ணே கொஞ்சம் சீக்கிரம் குடுங்க இருந்தே வாங்கிட்டு போறேன்னு சொல்லுவேன் " ஆனா நடக்காது .. ரெண்டு நாள் கழிச்சு வந்து வாங்கிட்டு ஓடி போயி டேப்பில் போட்டு கேட்கும்போது பெருகும் மகிழ்ச்சி ..... இறுதியாக காலத்தின் கையில் அதுவும் சிக்கி காயலான் கடைக்கு போனது .. வளர்ச்சியின் அழிவு
ஹ்ம்ம் .. எதுவுமே உடனே கிடைத்தால் அதில் சுவராசியம் இருபதில்லை ..
ஹ்ம்ம் .. எதுவுமே உடனே கிடைத்தால் அதில் சுவராசியம் இருபதில்லை ..
No comments:
Post a Comment