Saturday, 22 February 2014

புளியம்பூவு




பள்ளி முடிந்து வீட்டில் இருக்கும் அரையாண்டு, முழு ஆண்டு விடுப்பில் எல்லாம், விளையாட்டு இடம் வீட்டின் பின்னே வண்டி தடத்தை ஒட்டிய குளத்தங்கரையில் இருக்கும் எங்கள் புளியமரம் தான் . உச்சிப் பொழுதில் அந்த மரத்தின் நிழலில் ஒரு நூறு பேர் அமர்ந்து கொள்ளலாம் 

அந்த அளவிற்கு பெரிய புளியமரத்தை நான் இதுவரை கண்டதில்லை.விளையாட்டு எல்லாம் சாயந்தரம் வரைதான் .
இரவில் காற்றில் ஆடும்போது விஸ்வரூபம் எடுத்த பேயை போல இருக்கும் என்று ஆத்தா சொல்லும் .....

மேலும் அதன் வேர்கள் எல்லாம் சறுக்கு மரம் விளையாடவும் , பிடித்துகொண்டு குளக்கரையில் இருந்து உள்ளே இறங்கவும் வசதியாக இருக்கும் .

புளி உலுக்கும் காலகட்டத்தில் சுமார் 20 முதல் 25 மூட்டைவரைத் தேறும்.வீட்டுக்கு போக மீதம் விற்கப்படும் ... 

புளி உடைக்க , புளி குத்த என்று இரண்டு நாள் ஆட்கள் வேலை செய்துகொண்டே இருப்பார்கள் ...

பலவித விளையாட்டுகள் , மதிய தூக்கம் , வருமானம் என்று எல்லாவகையிலும் எங்களோடு பிணைந்தே இருந்தது அந்த மரம் .

இன்றும் எங்கள் கிராமத்து வீட்டின் பின்னால் நின்றுகொண்டு இருக்கிறது அந்த மரம் .... இரவில் தலையசைக்கும் போது பேயைப்போல் இல்லை , பழைய நினைவுகளில் மூழ்கி தலையசைப்பதாகவே தோன்றுகிறது .... ஹ்ம்ம்ம்

No comments:

Post a Comment