Saturday, 22 February 2014

குண்டு அரிசியும் வாசனை நெல்லும்

"மனமணம் " - குண்டு அரிசியும் வாசனை நெல்லும் 

எங்க வீட்ல எப்போதும் ஐ.ஆர்08 அல்லது 1009 நெல்லுவகைதான் , அப்போ அப்போ பொன்னியும் சாகுபடியாகும் .... குண்டு அரிசியாக ஆறுமாதம் சன்ன அரிசியாக ஒரு ஆறுமாதம் ......

இப்படியாக இருந்த சாகுபடியில் பட்டென்று நுழைந்தது அந்த நெல் வகை, ஜெ.ஜெ என்று பெயர் அதற்கு . பொன்னியை விட சன்னமான அரிசியை அப்போதுதான் பார்த்தேன் ... ஒரு முறைதான் சாகுபடி செய்தோம் ... வயக்காட்டதாண்டி போவும்போது அந்த இடமே நெல்லின் வித்தியாசமான புதுவித வாசத்துடன் இருக்கும் . எதிர்பார்த்ததைவிட அதிக மகசூல் ..... 
ஆர்வத்துடனும் ஆசையுடனும் குதிரில் போடப்பட்டது ....
இந்தளவு சன்னமான அரிசியை அரைக்க அப்போது மில் இல்லை.திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது ,தந்தையின் ஏற்பாட்டின் பேரில் ஒரு அரை மூட்டை அனுப்பப்பட்டு அரைத்துக் கொண்டுவரப்பட்டது ...

அம்மா சோறு பொங்கி தட்டில் போட்டால்.. கமகம என்று 
ஒருவிதவாசம். ஆவி போகும் வரை வாசனை பிடிப்பேன் தின்னவே தோணாது .மென்மையாக இருக்கும் சோறை அப்போதே பார்த்தேன் ...

ஆனால் .......

குண்டு அரிசியும் பொன்னியும் தந்த சுவையும் , மண்மனமும் இந்த அரிசியில் இல்லை என்பது எல்லோருடைய ( குடும்பத்தில் ) கருத்தும்...
ஆகையால் அரைமூடையுடன் நின்றது அரிசி வடிப்பு ....

அப்போதும் அந்த ரக நெல்லிற்கு சரியான விலை கிடைக்கவில்லை.நீண்டநாள் குதிரிலே கிடந்த நெல்,இறுதியாக தெற்கேயிருந்து வந்த ஒரு வியாபாரிக்கு விதை நெல்லாக போனது .
இப்போது அதைவிட சன்னமான அரிசிகள் கிடைத்தாலும் ..அந்த வித்தியாசமான வாசமும், சுவையும் மனதிலே தங்கிவிட்டது இன்றுவரை ....

No comments:

Post a Comment