Sunday, 3 February 2013

பந்தயம் .............

மனிதனின் தேவைக்காக  அழியும் அரிய  விலங்குகள் ......
மலேசியாவின் காடுகள்  நாம் அறிந்ததே .... பெரும் மழைக்காடுகளை கொண்ட இந்த நாட்டில்
இன்னும் சில காலத்தில் மழை பொழியாமலும் போகலாம் ....

பாமாயில் விளைவிப்பதற்காக  பல ஆயிரம் ஹெக்டேர்  வனம் மொட்டை அடிக்க  படுகிறது அரசின் உத்தரவுடன் ........

இன்று பாமாயில் உற்பத்தியில்  உலகில் இரண்டாம் இடத்தில இருக்கும் மலேசியா , முதல் இடத்திற்கு வருவதற்கு  கொடுக்கும் விலைதான் இந்த வன வேட்டை ......
தனி  ஒரு நிறுவனம் இதுவரையில் சுமார்  70000 ஹெக்டேர் அளவிற்கு வனத்தை மொட்டை அடித்ததுடன்  இனியும் முன்னேற செல்கிறது ................
             இதற்காக , இந்த  இட பிடிப்பு பந்தயதிற்க்காக  இவர்கள் கொடுக்கும் விலை, மதிப்பில் அடங்காதது.

அழிக்கப்படும்  வன உயிர்கள்  முக்கியமாக உலகின் மிக அரிய உயிரினமாக கருதப்படும்  குள்ள யானைகள் , உராங்குட்டான்  குரங்குகள் ,  காண்டாமிருகங்கள் மற்றும் அழியும் பல வித அரிய தாவரங்கள் ....
        இந்த மழைக்காடுகளின் அழிப்பு என்பது  முழுக்க முழுக்க  சாபவின் முதல் அமைச்சர் திரு . ஆமான்  ஒப்புதலின் பேரில் ( பாமாயில் பண்ணைகளை இன்னமும் பெருக்க ) நடைபெறுவதாகவே குறிப்பிட படுகிறது  .............
 உலகின் அரியவகை / மிகபெரிய மழை காடுகள் இன்னமும் மிச்சமிருப்பது பிரேசில் மற்றும் மலேசியா  போன்ற நாடுகளில்தான்  .. பிரேசில் ஏற்கனவே மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறது , இப்போது மலேசியாவும்  ....
         மீண்டும் .......... 

   இன்றோ நாளையோ  மரங்கள் இல்லாமல் போகலாம் .... ஆனால் நாம் என்றுமே அதன் நிழலிருந்து வந்தவர்கள் என்பதை மறக்க கூடாது ...............
 இந்த உலகம் தனக்கு ஏதுவாக தனை புதிப்பித்துகொள்ளும்(இதக்கு முன் மூன்று முறை ) ... மீண்டும் அதில் மானிட வளர்ச்சி அடைய  பல ஆயிர ஆண்டுகள் ஆகலாம் ....... ஆனால்
இயற்கையின் அழிவு என்பது மானிடத்தின் அழிவே தவிர வேறேதும் இல்லை ...

பந்தயத்தில் முன்னேறுவது என்னமோ மானுடம் தான் .ஆனால் வெற்றி பெறுவது எப்போதுமே இயற்கைதான்
 



              http://www.digitaljournal.com/article/342755

No comments:

Post a Comment