Tuesday, 12 March 2013

முத்தங்களும் நீயும் !

மௌனித்திருக்கும் இதழ்களே
முத்தங்களை பேசுகிறது !


இன்றோடு நம் காதல் தொடங்கி
ஐநூற்றியாறு நாட்கள் ஆகின்றன
என்றேன் !
வெட்கத்தோடு எண்ணத் தொடங்குகிறாய்
கணக்கிலடங்கா முத்தங்களை


உன்னுடலில் தொலைத்துவிட்ட முத்தங்களை
என்னிதழ்கள் தேடுகிறது -முடிவில்லாத
தேடல் !


களவாடிய முத்தங்களை காணவில்லை !
ஒருவேளை உன்னிதழ்களில் ஒளிந்திருக்குமோ ?


உன் இதழ் தீண்டும் போதெல்லாம்
முதல் மழை துளியின் ஸ்பரிசம் !


முத்தக் கவிதை வேண்டுமென்றாய்
எழுதுகிறேன் உன் இதழ்களில் !


நீ இதழ் சுழிக்கும்போதேல்லாம்
என் முத்தங்கள் சோம்பல் முறிக்கிறது !
 
 
 
 


உன் கன்னச் சிவப்பு
என் வருகையை அறிவிக்கிறது -என்றால்
உன் சிவ்வ்வந்த உதடுகள்
என் வேகத்தை அறிவிகிறது போலும் !


முத்தம் காய்ந்துவிட்ட உதடுகளில்
நினைவுகள் மட்டுமே ஈரமேற்றுகிறன !
 
 

No comments:

Post a Comment