Sunday, 3 February 2013

கிளுவை - வேலியில்லாத நினைவுகள்

கிளுவை ............................

எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் முதல் முதலில் அறிமுகம் ஆனது இந்த மரம் தான்  "கிளுவை "
       ஊஞ்சல் கட்டி ஆடும் அளவுக்கு ஒரு பெரிய கிளுவை மரம் எங்க கிராமத்து வீடு கோடியில் இருக்கும் .... என்ன காரணத்தினாலோ  அந்த மரத்தை  வெட்டாமல் விட்டுருந்தார்கள்.....  அருகிலேயே கிணறு என்பதால் நன்றாக கொழுத்து வளர்ந்து இருக்கும்

என்னுடைய முழுஆண்டு விடுமுறை நாட்கள் பெரும்பாலும் இந்த மரத்தடியில்தான் கழியும் ... அதை தாங்கும் அளவிற்கு அந்த மரம் அப்படி வளர்ந்து இருந்தது ....
ஒரே ஒரு முறை வீட்டில் வெட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்கள் போலும் ....நான் இல்லாமல் தனியே ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலும் ,அதை குறித்த அம்மாவின் தலையிடும் இல்லாமல் இருந்திருந்தால்  அப்போதே வெட்ட பட்டிருக்கும் .....
                வெறும் முள் மரம் தானே இதில் என்ன இருக்க போவுது என்று என்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை ....
ஏன் என்றால்.... நான் முதல் முதலில் எனக்கு விவரம் தெரிந்து  மிகவும் ருசித்து சாப்பிட்ட பச்சை இலை, இந்த கிளுவயிலைதான் ...ஏனோ அதன் ருசி எனக்கு மிகவும் பிடித்தது ....
ஆறுசுவையும் அதிலிருப்பதாக ருசிப்பேன் ..... எங்கள் வீட்டில் என்றில்லை எங்க பார்த்தாலும்  கிளுவையின் இலைகளை பறித்து தின்பேன் ......
                                              அந்த கிளுவையின் வயது என்னவென்று தெரியாது ....எந்த பறவையும் கூடு கட்டியதில்லை ஆனால் அந்த கிளுவைதாய் எண்ணிலடங்கா பிள்ளைகளை எங்களூரில் உருவாக்கினாள் .... தோப்பு முதல் வயல்காடு வரை அவளின் பிள்ளைகள் நிலங்களை காத்துநிற்கும் படைவீரர்களாக நிறுத்தினாள் .....

               அந்த கிளுவை தருதான் ..  எனக்கு பச்சிலையின் சுவையை தந்தது .....என் பொழுதுபோக்கினை வலுவாகியாது , மரங்களின் மீதான பாசத்தை துளிரச் செய்தது ...
சிறு பராயத்தில் என்  வீட்டு வெறுப்புகளில் இருந்து எனை சந்தோஷமாகியது...

                            இதையெல்லாம் விட மரங்களின் மீதுள்ள பாசத்தை அதிகரிக்கச் செய்தது ,
அந்த மரத்தின் நினைவுகள்  இன்னமும் பசுமையாய் இருக்கிறது .....
                     இப்போது அந்த கிளுவை இல்லை . யாரும் வெட்டவும் இல்லை ....இயற்கையின் விருப்பத்தில்  சேர்ந்துவிட்டது .. ஒரு மழைநாளில் இடி விழுந்த பின்பு அதன் பொலிவு போனது ....மெல்ல மெல்ல கருகி இறுதி நாட்களை .முடித்துக்கொண்டது ....இன்னும் அதன் தடம் எங்கள் கிராமத்துவீட்டில்  இருக்கிறது .. எப்போதெல்லாம் எங்கே செல்வேனோ  அப்போதெல்லாம்  ஆசையோடு அந்த தடத்தை தடவி பார்ப்பேன் ....
                            இன்று பலருக்கு, நாகரீக வாழ்விற்கு
கிளுவைகளைப் பற்றி தெரியுமோ தெரியாதோ ....ஆனால் நாம் எல்லாமே மரத்தினடியில் இருந்து வந்தவர்கள் என்பதை எக்கலாத்திலும் மறுக்க முடியாது ...
              எனது சதையில் இன்னமும் கிளுவை வாசம் படிந்து கிடக்கிறது .....எக்காலத்திலும் மாறாத வாசம் ..... இன்னமும் இந்த கிளுவைகளை காணும் பொது உற்சாமாக ஓடிச்சென்று இலைகளை பறித்து தின்கிறேன் ....ஆனால் மிக அரிதாக ......ஹ்ம்ம்
                                  



2 comments: