யானைகள் பூமியின் நடமாடும் மேகங்கள் ,அவைகள் இல்லாமல் மழையை நினைத்து பார்க்கமுடியாது --ஒரு இயற்கை வல்லுநர் குறிப்பிலிருந்து
சத்தியமான வார்த்தைகள்
வன உயிரின் ஆதாரமான யானை தான் வனத்திற்குள் இருக்கும் பல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வழிகாட்டி ........நீர் இருக்குமிடம் முதல்கொண்டு உணவுதாவரம் வரை அனைத்திற்கும் பெரும் உதவியாய் இருப்பது யானைகளே
யானைகள் ஒரு சதுர கிலோமீட்டர் பரபளவில் சுமார் முப்பத்தியேழு டன் சாணத்தை தள்ளுகிறது (ஒரு வருடத்தில்)இதனால் வனமெங்கும் விதைகள் பரப்பபடுகிறது வனவளம் பெருகுகிறது ......ஆனால் இன்று உலகின் சொகுசுகளும் ,பண முதலைகளும்யானையின் வலசை () மறித்து கட்டடங்கள் கட்டி யானைகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளனர் இதற்க்கு அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுபதாக தெரியவில்லை .....
உதகை, முதுமலை போன்ற யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அவற்றின் மிக முக்கியமான வலசை கள் இவ்வாறு மறிக்க பட்டுள்ளன .....இதனால் யானைகள் மலையை விட்டு தடம் மாறி கீழிறங்கும் வேளைகளில்மனித கூட்டத்தால் விரட்டபடுகிறது , கீழேயும் இறங்காமல் வனதிற்குள்ளும் நடமாட முடியாமல் யானைகள் படும் பாடு பெரும் வேதனை ...முடிவு ?ஓரிரு வருடங்களுக்கு முன்னே நடத்த அதி கோரமான ரயில் விபத்தில் இறந்து போன யானைகளின் மரணம் நமக்கு நிறைய பாடங்களை சொல்லித்தருகிறது ஆனாலும் நாம் படிபதற்க்கு தயாரில்லை ........
கோவில்களிலும் விழாக்களிலும் மட்டுமே யானைகளின் கண்டு நாம் ஆனந்த படுகிறோம் ஆனால் ஒருபோதும் அவை இதை விரும்ப வில்லை ஆசை பேராசை பொருளாசை பெண்ணாசை இவற்றையெல்லாம் அத்துவிட்டு நம்மால் பெரும்வனத்திற்க்குள் எவ்வளவு நாட்கள் இருந்துவிட முடியும் ??? ஆனால் யானைகளையும் வேறு சிலமிருகங்களையும் நாம் இந்த கான்க்ரீட் காட்டுக்குள் அலையவிடும் குருரம் மனிதனைவிட வேறு யாருக்கு வரும் .யானைகள் வெறும் காட்சி பொருள் அல்ல , அவை இயற்கையின், இந்த புவியின் ரட்சகர்கள் , இந்த உலகத்தின் கடைசி எச்சமான நாம் இதை என்று புரிந்துகொள்வோமோ?இந்த மனித கூட்டம் இல்லாமல் இந்த புவி பலகோடி ஆண்டுகள் ஜனித்திருந்தது....இயற்கைக்கு மனிதன் எப்போதும் தேவையாய் இருக்கவில்லை ....மனிதன் வாழ எப்போதும் இயற்கை தேவை . இதை புரிந்துகொள்ளதா இந்த மனித கூடத்திற்கு ஆறாம் அறிவு இருந்தென்ன பயன் ?

இயற்கைக்கு மனிதன் எப்போதும் தேவையாய் இருக்கவில்லை ....மனிதன் வாழ எப்போதும் இயற்கை தேவை .
ReplyDelete:)கசப்பான உண்மை
Deleteமனிதர்களின் அட்டூழியங்களை ஒழித்து வன உயிர்களைக் காத்து இயற்கையை மீட்டெடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.
ReplyDelete