வந்தேறிகள் .......
பேசும் மொழி முதல் உயிர் வாழ தேவையான
அனைத்தும் நாம் எடுத்துகொண்டது ,கொள்வது
இந்த இயற்கையிலிருந்து .......
ஆனால் நாம் ,
பால் கொடுக்கும் மார்பை கடித்த்தெறியும் கூட்டமாகிவிட்டோம்
வன உயிர்களிடத்தில் நாம் எப்போதாவது அன்பு செலுத்தியதுண்டா?
நம் வளர்ப்பு அப்படி
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் "
என்று சொல்லி வளர்ந்த சமூகம் அல்லவா நாம் ...
எதையும் பணத்தோடுதான் பார்க்கும் .....
செய்யும் தவறுக்கு கூண்டில் அடைபடும் மனித இனத்திற்கு போராட ஆயிரம்
ஆயிரம் பேரு உள்ளனர் ....
ஆனால் வாழ்வை பத்தடி கூண்டிற்குள் தொலைத்த/தொலைத்துக்கொண்டிருக்கும் வன உயிர்களுக்கு
போராட பேச யாரிங்கே ?
வனத்தின் வாசம் அறியாமல் வம்சம் இழந்து போகும் இவுயிர்களின் வேதனைக்கு பதில் சொல்ல முடியுமா நமக்கு ?
நீயும் நானும் பார்த்து மகிழ ,நமது பொழுதை போக்கவா இவ்வுயிர்கள் இந்த பூமியில் பிறந்தன ?
"இன்னைக்கு சண்டே அப்போ வா ஜூவுக்கு போவலாம் "
இந்த வார்த்தையில் தெரியவில்லையா நமக்குள் இருக்கும் குருரம் ....?
ஜூவிலோ ,மலைபாதையோரங்களிலோ கை நீட்டும் குரங்குகள்
நம்மிடம் வறுகடலையா கேட்கிறது ? வாழ்வாதாரத்தை அல்லவா கேட்கிறது ,
அட வெந்ததை தின்னு சந்ததியை பெருக்கும் மடஜென்மமே இது உனக்கு புரியவில்லையா ??
நமெக்கென்ன கவலை அதைப்பற்றி ?
எந்த நடிகைக்கு எங்கே பச்சை குத்தியுள்ளது ? அவளுக்கு இது எத்தனையாவது காதல் ?என்று
ஊன்று கவனிக்கும் புனித ஆத்மாக்கள் அல்லவா நாம் .
நமது வீட்டில் நம்மோடு வாழ்ந்துவரும் கரப்புகளை ,பல்லிகளை என்றாவது ஒரு நொடி ஒதுக்கி கவனித்ததுண்டா ?
தலையில்லாமல் மூன்று நாட்கள் உயிரோடு வாழும் கரப்பு ,
நம்மால் சோறு இல்லாமல் ஒரு நாள் இருக்க முடியுமா ?
அறுந்தாலும் மீண்டும் துளிர்க்கும் பல்லியின் வால்
நம்மிடையே மீண்டும் துளிர்ப்பது மயிரும் நகமும் ( இரண்டுமே செத்த செல்லின் வெளிபாடு வேறு )
இன்று உலகத்தில் பூச்சியினத்தை கொல்ல தயாரிக்கபடும் மருந்துகளின் எண்ணிக்கை அதற்கான பணம்
எவ்வளவு ?
இந்த அழிப்பால் ( மருந்தால் )நமக்கும் வரும் வியாதிகள் எத்துனை எத்துனை ?
இயற்கையாகவே பூச்சிகளை தின்று வாழும் பறவைகளை நாம் கொன்றழிததின்
கணக்கு தெரியுமா ?
வன உயிர்களை வணங்குவோம் மதத்தின் பேரால் , ஆனால் கொல்லுவோம் மனிதத்தின் பெயரால்
நமது எல்லா செயல்களும் வன உயிர்களை ஒத்தே இருக்கிறது
எடுத்துகாட்டு முதல் திட்டு வரை ......
ஆனால் ஏட்டில் மட்டுமே அதை ரசிக்கும் ஒரு கேவலபிறவிகள் நாம் என்று சொல்லுவதை தவிர்க்க முடியவில்லை ,
வன உயிர்கள் நம்மிடம் கேட்பத்தெல்லாம் வாழும் இடத்தைதான்
நம்முடைய கரிசனத்தையோ ,பரிதாபத்தையோ அல்ல !
இந்த உலகில் இறுதியாக வந்த வந்தேறிகள் நாம்
அவர்களின்( வன உயிர்கள் ) இடத்தை வலுகட்டாயமாக பறித்துகொண்டவர்கள்
அவர்களின் கருணை இல்லாமல் நாம் ஒரு போதும் வாழ முடியாது
இதை நாம் எப்போது புரிந்து கொள்ள போகிறோம் ??????
உலகம் தான் தோன்றியது முதல் இன்றுவரை இக்கட்டன சூழலில்
தன்னை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளது ,
அந்த சூழல் நெருங்குவதகாவே தோன்றுகிறது ......

No comments:
Post a Comment