Saturday, 2 February 2013

கருவை முள்


ஒரு நாட்டிற்க்கான சுதந்திர தினம் வருடம் தோறும் கொண்டடபடுவதின் அர்த்தம் என்ன

எப்போதும் நம்முடைய கடந்த சரித்திரத்தை மறக்ககூடாது என்பதை தவிர வேறு என்னவாக  இருக்க முடியும்?

பெண்கள்தினம் என்பதே அடிமைப்பட்டு கிடந்த சரித்திரத்தை அவர்கள் மறக்க கூடாது எப்ன்பதை நினைவுறுததான்
இது மற்ற எல்லா கொண்டாட்ட தினங்களுக்கும் பொருந்தும் ....

பாரதி கண்ட புதுமை பெண்கள்  அவர்காலத்தை போலவே இன்றும் இல்லாமல் இருகிறார்கள்
உடலளவில் கொண்டுவரும் மாற்றம் மட்டுமே புதுமை பெண்ணாக மாற்றிவிடுமோ ?
சமீபத்தில் ஒரு தோழியிடம் பேசிகொண்டிருந்தபோது கேட்டேன் " உனக்கு பிடித்த பெண்மணி யாரென்று "
சட்டேன்னே பதில் சொன்னாள்  உலகளாவிய பெயர் பெற்ற பிரபல பாப் பாடகியை .
இப்படித்தான் இருக்கிறது இன்றைய பெண்கள் உலகம் ....

ஒப்ரா வின்ப்ரே  இன்றும் சந்திக்கும் பல பிரச்சினை களுக்கு காரணம் என்னவாக இருக்க முடியும் நிற வெறியை தவிர ?


 எத்துனை பழங்குடிகள் பெண்கள் படும் துயரை யாரறிவார் ?
ஆங் சூகியின் மனதைரியமும் ,பொறுமையும் எத்துனை பெண்களுக்கு வரும் ?
ஆண்களுக்கு நிகராக என்ற கூற்றே தவறு ....
அதை பெண்களே வைத்துகொள்ளும் ஒரு தடைகல்லகாவே இருக்கிறது
அவர்களின் எல்லையை அவர்களே நிர்மாணித்து கொள்ளும்  மனோபாவம் இது .....
எப்போதும் ஒரு சிறு வட்டத்தினுள் இருக்கவே விரும்புவதை தான் இது காட்டுகிறது

கீழே கொடுத்துள்ள இந்த பக்கத்தை சொடுக்கவும் ...
http://www.vinavu.com/2011/07/07/desert-flower/

இதை பற்றிய ஒரு உலக சினிமாவும் வந்துள்ளது
எத்துனை பெண்களுக்கு இந்த  இழிவு பற்றி தெரியும்
இவர்களும் பெண்கள் தான்  இந்த உலகில் தான் இருகிறார்கள்
..

பெண்கள் தினம் என்றே ஒன்று கொண்டாடுவது தெரியாமல் வாழும் பெண்கள் எத்துனை கோடி பேர் ???
பெண்கள் போற்றபட  வேண்டியவர்கள் எக்காலத்திலும்.............
அதற்கென்று ஒரு தினம் அவசியமற்றது .....

No comments:

Post a Comment