அந்த நகரத்தின் வெக்கைதாங்காமல் பறந்து வந்து மொட்டை மாடியில் அமர்ந்தது
அந்த சிட்டு குருவி ,
அடேயப்பா என்ன வெய்யில் என்ன வெய்யில்.....புலம்பியபடியே
இருந்தது ...களைப்பும் வாட்ட அருகில் இருந்த கிண்ணத்தில் தண்ணீரை குடித்துவிட்டு
ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டது ...
ம்ம் இந்த உலகம்தான் எவ்வளவு மாறிவிட்டது எங்க பார்த்தாலும் உயரே உயரே கட்டிடங்கள்
எங்கு நான் போய் தேடுவது ????
சோகத்தோடு மீண்டும் நினைவுகளில் தொலைந்துபோனது அந்த குருவி .....
அம்மாவை ரொம்ப பிடிக்கும் எனக்கு ,,,,,,எனக்கு கூட பிறந்தவர்கள் ரெண்டுபேரு
அம்மாடி .......அம்மா எவளோ தூரம் பறந்து பறந்து இரை தேடிட்டு வருவாங்க .....
நாங்கெல்லாம் கிய்யா முய்யன்னு கத்திகிட்டு கிடப்போம் ....
அப்போல்லம் அம்மா நெறைய கத சொலுவாங்க ..
அவங்க அம்மா காலத்துல எல்லாம் இவளோ தூரம் போக வேண்டியது இருக்காதாம் .....
அப்போல்லாம் வீட்டுக்குளே நெல்லுகுதிர் இருக்குமாம் ...
சிதறி கிடக்கும் நெல்லுமநிகளை கொத்தி தின்றால் போதுமாம் ,,,,,,
அது மட்டுமில்ல வீடுகள்ல வாசல்ல எதாவது வடாம் வத்தல் எதாவது காயவச்சிட்டு இருப்பாங்களாம் ...
எப்போவது போரடிச்சா பாட்டி கழனிக்கு போய் நெறைய தானியங்கள கொண்டு வருவாங்களாம் .....
அது மட்டுமில்ல அம்மா நல்ல கொழு கொழுன்னு இருப்பாங்க ... அதுக்கு காரணம்
பாட்டியும் தாத்தாவும் அவங்களுக்கு ஊட்டுன புழு பூச்சிகதாணம்......நல்ல புரத சத்துன்னு சொல்லுவாங்க
ஆனா எங்களுக்கெல்லாம் அது கிடக்கவே இல்ல ...
அம்மாகிட்டே கேட்டேன் " ஏம்மா எங்களுக்கு மட்டும் ஊட்டலன்னு .....
அதுக்கு அம்மா சொன்னாக வயகாடேல்லாம் பூச்சிகொல்லி அடிக்கிறாங்களாம் .....
அதுனால பூச்சியே இல்லியாம் .....எங்களுக்கும் சத்துள்ள ஆகாரம் கிடைக்கல..
அதன் கொஞ்ச தூரம் பறந்தாலே எனக்கு களைப்பா இருக்கு ...போல ,
எங்க வீடு அருமையாய் இருக்கும் தாவி தாவி உக்கார ஓட்டு கூரை இருக்கும் ...
ஓடி ஒளிய நிறைய இடம் இருக்கும் ......
அம்மா குச்சி பஞ்சு ன்னு எதெதையோ கொண்டாந்து கட்டி வச்சிருபாங்க அதுல தான் பொறந்தோம் ......
ஆனா அம்மா பொறந்தது மெது மெத்துன்னு இருக்குற வைக்கோல்
வீட்டுலயாம். இப்பொஎல்லம் வைக்கோல் கிடக்கிரதுல்லன்னு அம்மா சொன்னங்க ,,,,,
ம்ம்ம் என்ன பண்றது நானும் வளர்ந்துட்டேன் சோடி தேடிகிட்டேன்
அத பாக்காதான் அம்மா இல்ல ....ம்ம்ச்
இப்போ கூடு கட்ட தான் சரியான இடம் தேடிகிட்டு ரொம்பநாளா
அலையுறேன் ......
இப்பொஎல்லம் மனுஷன்ங்க ஜன்னல் இருந்தாலும் மூடியே வச்சிருக்காங்க ,,,,,
அது மட்டுமில்ல பெரிய பெரிய கட்டிடம் கட்டிருக்காங்க மொழுக்குன்னு இருக்கு
எங்களுக்கு உக்கார கூட இடம் இல்ல .....
எங்களோடே உணவும் வாழ்வாதாரமும் மங்கி போச்சு ..
இப்பொஎல்லம் எங்க இனத்தில அதிகமா யாரையும் பாக்க முடிரதுல்ல!!
உங்க கிட்ட நான் ஒன்னே ஒன்னு கேக்கவா
உங்கள நம்பித்தான் நாங்களும் இருக்கோம் .....உண்மைதான்
ஆனா எங்க வாழ்வுக்காக நாங்க யாரையும் அழிச்சதில்ல ...
நீங்க மட்டும் ஏன் ...?
நீங்க வாழுறதுக்காக எங்கள மாதிரி எத்துண பறவைகள தடம் தெரியாம
அழிச்சிருபிங்க?
நீங்க எங்களுக்காக வாழவேண்டாம் உங்களுக்காக உங்க எதிர்கால சந்ததிக்காக
வாழுங்க ......
எங்கள அழிச்சிட்டு இந்த உலகத்துல நீங்க எத வெல்ல போறீங்க ???
எவ்வளோ கேக்கணும் நினச்சேன் ...ஆனா உங்களுக்கு அது புரியாது
புரிஞ்சாலும் நீங்க திருந்தவும் மாட்டிங்க ...
அப்புறம் ஒண்ணுங்க ... எங்கள அழிச்சுபுட்டு இப்போ அங்க அங்க ....
டப்பா டப்பாவ வச்சு இருகிங்கலாம்
நாங்க வருவோமின்னு
சிரிப்பு தான் வருது ......
சரி நான் வரேனுங்க ... உங்க எதிர்காலத்த பாத்துக்குங்க .......

No comments:
Post a Comment