அறியாத மானிடம்
.............................. .
பறவையின் சிறகுகளில்
படிந்து கிடக்கும்
நெடும் பயணக்கதைகள் ;
புலியின் பாதங்களில்
பரவிக்கிடக்கும்
வனத்தின் வாசம்
சிங்கத்தின் பிடரிக்குள்
ஒளிந்து கிடக்கும்
உயிர் சூழலின் உண்மை ;
உதிர்ந்து கிடக்கும் இலையில்
பொதிந்து கிடக்கும்
பசுமையின் தீராத
சேதிகள் ;
கடந்து செல்லும் நதியில்
கரைந்து போகும்
காடுகளின் பெருங்குரல் ;
எதுவும் புரிவதில்லை
மானுடத்திற்கு ;
- கண்ணன் திருவோணம்

No comments:
Post a Comment