Saturday, 29 August 2015

எந்தன் பயணம் தீர்வதில்லை....

சில நேரங்களில் தேவைகளால் எடுக்கப்படும் தீர்மானம் நம்மைத் தின்று விடுகிறது .

தனித்து விடபட்டவனிடமிருந்து எதை கேட்பாய்
நினைவுகளைத் தவிர -கட்

---------------------------------

அன்பினால் அறியப்பட்டேன்
அன்பினால் அறையப்பட்டேன்
அன்பினால் நிறைக்கப் பட்டேன்
அன்பினால் நிராகரிக்கப் பட்டேன்
அன்பினால் சூழப்பட்டேன்
அன்பினால் சூறையாடப்பட்டேன்
அன்பினால் எழுப்பப் பட்டேன்
அன்பினால் எறியப்பட்டேன்
அன்பினால் மகிழ்விக்கப் பட்டேன்
அன்பினால் இதோ மரணித்தும் விட்டேன்
அன்பே ...அன்பே ..... எங்கும் நிறைத்தாய்
என்னைமட்டும் ஏன் நீத்தாய்
-------------------------------------------------
நிரந்தரமற்ற இந்த உலகில்
உன்னைத் தேடுவதை விட்டுவிட்டேன்
இனி நான் தொலைந்தனாவேன்
--------------------------------------------------
காதலெனும் கோப்பையில்
எனை நிரப்பிகொள்கிறேன்
பருகிவிடு நீ
உயிரற்றுப் போகிறேன்
---------------------------
நீ வருவாயென ஒவ்வொரு கணத்தையும்
பருகிக் கொண்டிருக்கிறேன்
இந்த காலம் என்னை விழுங்குமுன்னே
வந்திடுவாயென காத்திருக்கிறேன்
------------------------------------------------------
மறந்துப் போகும் கனவுகளில்
எப்போதும் நீயிருக்கிறாய்
-----------------------------------------------
வெட்கம் மறந்த கண்களில்
என்னை புதைத்துச் செல்கிறாய்
திமிர்தெறிக்க புணர்ந்து தீர்க்கிறேன்
உனது வெட்கங்களை
----------------------------------------------------
உளியெடுப்பவன் நாத்திகம் பேசினால் என்ன சொல்வான் ?
கல்லைச் சிதைக்கிறேன் என்றா ? 
-----------------.....................................................................................
பிரிவில்லாத யாரிடமும்
அன்பு முழுமையாக இருப்பதில்லை
பிரிவுகள் தேவையானது
-----------------------------
யாரழுகையிலும் நிறமற்றதாகவே இருக்கும் கண்ணீர் - புரிவாய் பின் பொழுதுகளில்
----------------------------------------
அன்பென்றால் என்னவென்றுத் தெரியாமல் இருக்கலாம்
கண்ணீர்த் தெரியும்
அதன் வலி புரியும் ,வேதனை புரியும்
விட்டுச் செல்லும் துயரங்கள் தெரியும்
அன்பை உணரதவனிடம் நீங்கள் கண்ணீரை மட்டும்
எதிர்பார்ப்பது நியாயமா ? விட்டுச் சென்றுவிடுங்கள்
நான் ஒரு பயணியாகவே இருக்க விரும்புகிறேன்
கடந்தவை யாவும் எனை கடந்ததகவே இருக்கட்டும்
எந்தன் பயணம் தீர்வதில்லை
ஒரு போதும்
------------------------------------------
சலனமற்ற பொழுதுகளில் எழுதித் தீர்க்கிறேன்
எந்தன் துயரங்களை உன் நினைவுகளில்

No comments:

Post a Comment