Wednesday, 2 July 2014

மழை ஞாபகம்


மழை - குளத்து மீன்கள் என்ன செய்யும்

மழை - ஆடுகள் அசைபோட்ட பள்ளிக்கூடங்கள்

மழை - அழகாகும் ஜன்னல்கள்

மழை -முதல் நிர்வாண குளியல்

மழை - கப்பல் உருவாக்கிய பிராயங்கள்

மழை - நனைந்து நக்கிய நாய்க்குட்டி

மழை - மௌன சாட்சி ...

மழை -என் வெயில் காலத்தின் தாகம்

மழை - போர்வைக்குள் போராடிய காலங்கள்

மழை - முதல்முறை நனைந்த உன் கூச்சம்

மழை - தாயின் முந்தானை வாசம்

மழை - இதழ் நனைத்த முதல் முத்தம்

மழை - பிரிவின் சாட்சி

மழை - காதலின் முதல் சந்திப்பு

மழை - ஒரு துளி ஹைக்கூ

No comments:

Post a Comment