நேற்றைய அனுபவம் மிக வித்தியாசமானது ...(21-02-14)
SSCTN நடத்தும் பங்குனி ஆமை (olive ridley )நடையில் இரவு முழுவதும் கலந்துகொண்டு சென்றது முற்றிலும் வித்தியாசமான அனுபவம் ..
இந்த கடல்தான் எத்தனை ஆச்சர்யங்களை கொண்டுள்ளது,உணர்ந்தால்தான் புரியும் போலிருக்கிறது .
ஒரு இரவு முழுவதும் கடற்கரையில் அதுவும் கடல் உயிரனத்தை தேடி அலைவதே எனக்கு வித்தியாசமாகவும் , சிலிர்ப்பாகவும் இருந்தது ...
------------------------------------------------
கவனித்தவை ....
பெரும்பாலும் சாராய குப்பிகளும் , நிறைய நெகிழி கழிவுகளும்,
கடல் வளத்தை சீரழிக்க நேரடியாகவும் , மறைமுகமாகவும் மனிதன் செய்யும் அட்டூழியம் இது.
அமாவாசையில் போனால் கூட தெளிவாக தெரியும் அளவிற்கு விளக்கு வெளிச்சம் ( ஆமை குஞ்சுகளுக்கு முதல் எதிரி )
நடையில் கூடவே பயிற்சி பெறுவதற்கு வந்த இரண்டு காட்டிலகாவை சேர்ந்தவர்கள் எதையும் கண்டுக்கொள்ளாமல் கடற்கரையில் அலையோடு விளையாடிக்கொண்டிருந்தது ( என்ன ஒரு பொறுப்பு )
எதை பார்த்தாலும், உடனே கமெராவை தூக்கி க்ளிக் செய்யவதில் மட்டும் அதிக ஆர்வம் கொண்ட மக்கள்
---------------------------
நடையில் கிடைத்த/ கேட்ட சில தகவல்கள்
வகைப்படி கடலாமைகளில் மிகச் சிறியது இந்த பங்குனி ஆமைகள் ( 35லிருந்து 45 கிலோ வரை இதன் எடை )
வருடத்திற்கு இரண்டு / மூன்று முறை முட்டையிடும் ஆமைகள் சராசரியாக 100 லிருந்து 180 வரை முட்டைகள் இடுகிறது
இரண்டு மாதங்கள் கழித்து பொரியும் குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை கொண்டு கடலுக்கு செல்கின்றன
( இதனாலையே தெரு விளக்குகள் பேராபத்தாக விளங்குகின்றது , தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாதை மாறி சென்று இறந்துவிடக்கூடும் ( நாய்கள் , உடல் வறட்சி )
இங்கே பிறந்த ஆமைகள் சுமார் 15 -20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இங்கே வந்து முட்டைகள் இடுகின்றன ....
சென்னைக்கு அடுத்து ஒரிசாவில் இந்த ஆமைகள் அதிகம் முட்டைகள் இடுகிறது ( பெரும்பாலும் இந்த ஆமைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வருவதாக ..)
அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பங்குனி ஆமைகள் கிட்டத்தட்ட பத்துக்கோடி ஆண்டுகளாக இந்த கடற்கரையில் வந்து முட்டையிட்டு செல்கிறது ...
எத்தனையோ காலமாற்றம் , பேரழிவிலும் தாக்குப் பிடித்து வாழ்ந்துக் வரும் இந்த ஆமைகளால , கேவலம் மனிதனை எதிர்க்கொள்ள முடியாமல் தவிக்கிறது ...
பொதுவாக ஆமைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள்
- மீன் வாருதல்,இதில் இவை மாட்டிக்கொண்டு இறந்துவிடுவதுண்டு
- மோட்டார் படகுகளின் மாட்டிக்கொண்டு இறப்பவை
- முட்டையிடும் போது நாய்களால் கடிப்பட்டு இறப்பவை
- மேலும் விளக்குகளின் வெளிச்சம் , நெகிழி பைகள்
இறுதியாக ....
விவாதத்தின் போது ஒரு மாணவன் " இயற்கை வளம்பெற வேண்டுமானால் ஒரே ஒரு விலங்கு அழிவின் விளிம்பிற்கு செல்லவேண்டும் - அது மனிதன் என்ற முறையற்ற விலங்கு" என்று சொல்கிறார் - அற்புதமான உண்மை ...
எத்தனையோ இயற்கை பேரழிவை சந்தித்தும் வாழ்கின்ற உயிரினங்களால் மனிதனை எதிர்க்கொள்ள முடியாமல்,அழிந்து வருகிறது .....
இது உலகம் மீண்டும் ஒரு புதுபித்தலுக்கான நேரம் என்றே தோனுகிறது
—SSCTN நடத்தும் பங்குனி ஆமை (olive ridley )நடையில் இரவு முழுவதும் கலந்துகொண்டு சென்றது முற்றிலும் வித்தியாசமான அனுபவம் ..

No comments:
Post a Comment