Friday, 1 February 2013


டு டு . மிகவும் நட்பு பாராட்டும் பறவை ... மனிதர்களை கண்டால் பயந்து ஓடாமல் அருகில் வந்து கொஞ்சும் ...(மனிதனின் துரோக புத்தி அவைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை ) ..... மொரிசியஸ் தீவுகளில் வாழ்ந்து வந்தது ...
அங்கே குடியேறிய போர்துகீசியரால் பெருமளவில் வேட்டையாட பட்டது ....(1598-1681 வரை ) இந்த காலகட்டத்தில் இந்த அப்பாவி பறவையினம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது ......
கடைசி பறவையும் 1681-ம் ஆண்டு இறந்தது/கொல்லப்பட்டது . வெறும் நூறு ஆண்டுகளுக்குள் ஒரு இனத்தையே அழிக்க வல்லது மனிதனின் துரோகசெயல் என்பது, எவ்வளவு கொடுமை

இந்த பறவையின் அழிவிற்கு பிறகு அந்த தீவில் இருந்த கல்வாரிய மரமும் அழிய .தொடங்கியது ....
.காரணம் ..... டு டு பறவைகள் இந்த கல்வாரிய மரத்தின் பழங்களை உண்டு செமிக்கும் விதைகள் மட்டுமே இந்த மரங்கள் முளைக்க ஏதுவாகின
. இந்த மரவகையை முளைக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது ......
கண் கெட்ட பிறகு சூரிய ................ இதுதான் மனிதன் .குணம் ..... இழந்தவை இழந்தவையே ,,,,,,என்று புரியுமோ இந்த அற்ப பதர்களுக்கு

இன்று டு டு பறவை நம்மிடையே இல்லை .... அவை விட்டு சென்ற சொல் ( dIE lIKE a dOdO )மட்டுமே நம்மிடம் அவைகளை நினைவு படுத்துகிறது ...கூடவே மனிதனின்துரோகத்தையும்

No comments:

Post a Comment