Tuesday, 21 August 2012

பூக்கும் வாசம் 
உலகறியும் 
பூக்கும் வலியினை 
யாரறிவார் !

மழையின் ஆனந்தம் 
உலகறியும்
மேகத்தின் சுமையினை
யாரறிவார் !

வெடித்துக் சிதறும்
அழுகையை , உலகறியும்
உள் ரணத்தை
யாரறிவார் !

வேதனைகள் பாடமென்றால்
வீண் போதனைகள்
இங்கெதற்கு ?

கடந்துப் போகும்
பாவங்களில்
எது எனக்கானது ?

No comments:

Post a Comment