காலவெள்ளம் கடந்தே போனது
புது வெள்ளம் பூமியை தொட்ட நாளில்
பூத்தூவிய காலம் ....
உவகை பொங்க அள்ளிதெளித்து
விளையாடிய காலம் ..
...நேரம் கரைய நீச்சல் ஆடிய காலம் ...
உள்முழ்கி கை நெறைய மண் அள்ளிய
காலம் ..
எல்லாம் கடந்தே போனது
மணல் நிறைந்த நதியிருக்கு
மண்ணள்ள மனதில்லை
அள்ளி தூவ பூவிருக்கு
அடித்துசெல்ல நீரில்லை
நதியிலாடி ,நதியிலோடிய காலம்
கடந்தே போனது ...
மனிதா
உணர்வாயா புதைந்தது நதியல்ல
நம் நாகரிகமும் தான் ......
No comments:
Post a Comment