Saturday, 26 March 2011

கண்ணாம்பூச்சி

சிறுவயதில் இருந்து வெளிய தங்கி படிப்பதால் ....ஆண்டு பரீட்சை முடிந்த பின்புதான் வீடிற்கு வரமுடியும் .....அந்நாளில் கிராமத்தில் எனக்கு நண்பர்கள் அவ்வளவு கிடையாது ...
                                   கிடைக்கும் நண்பர்களுடன் சிறு சிறு விளையாட்டுகள் ...
கிட்டிபுல் , கோலி குண்டு ...கண்ணாம்பூச்சி ....பேய் பந்து  என நாட்கள் கழியும் ..
                            அவர்கள் இல்லாத நாட்களில் அக்காவின் நண்பி களுடன் விளையாடுவேன் ...( அக்கா ஊரில் படித்தால் நிறைய நண்பர்கள் ) அஆனல் என்னை சேர்த்து கொள்ள மாட்டார்கள் ...
         அக்காவின் சிபாரிசில் ( இல்லை என்றல் அக்கா என்னை அடித்தாள் என்று அம்மாவிடம் சொல்லுவேன் என்ற பயத்தில் ) உப்புக்கு சப்பாணியாக இருப்பேன் ....
                             எலாங்கல்லு , கிளித்தட்டு , பல்லாங்குழி  என்று போகும் ...
சில  நேரம் என் நண்பர்களுடன் குருவி புடித்தல் , பொன்வண்டு வளர்த்தல் , மின்மினி புடித்தல் ,பட்டு பூச்சி  புடித்தல் என்று விளையாடுவோம் ....
                 ( இப்போது இவை எல்லாம் இருக்க என்று தெரியவில்லை )
எப்ப்ப்தும் பழைய geometry  டப்பா  பொன்வண்டுக்கு போகும் ....
அது இடும் ரப்பர் முட்டை அழகஹியா இருக்கும் ....
சிட்டு குருவிக்கு என வீட்டில் செய்து வைக்கும் அட்டை பெட்டி கூட்டில் அவளவு  சீக்கிரம் வராது.
விடுமுறை முடிந்து செல்லும் போது தான் அமரும் ...
கடுப்பாய்  இருக்கும்.
                                 கொடுக்கபுள்ளி  இலந்தை ..  என்று அடிப்பதும் நடக்கும் ...
விடுமுறை முடிந்து செல்லும் போது மீண்டும் மனம் அடுத்த விடுமுரைஏய் நினைத்து ஏங்கும்....
                   இப்போதெல்லாம் போகோவும்  சுட்டி யும் குழந்தைகளின் விளையாட்டு ஆகிவிட்டது ...
தாய் மார்களும் பெரிதாக ஆலடி கொள்வதில்லை ..
அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி ......
பிள்ளைகளின் கற்பனை டிவி அளவில் சுருங்கி  விட்டது
வளரும் போத action  race என்று கடுமையாய்  வளரும் பிள்ளைகள் ...
நமது பண்பாட்டு விளையாட்டில் கற்பனை அறிவு திறன் வளர்க்கும் முறை என்று எல்லாம் இருந்தது ...
            இனிமையாக இருக்கட்டுமே என்று தன அதற்க்கு நொண்டி கொடு  கிளித்தட்டு என்று  பேர வைத்தார்கள்.
எனகே இப்போதெல்லாம் அழுது போய்விட்டது ...
எப்போதோ ஊருக்கு செல்லும் போது பசங்களிடம் செல்போன் கேம் தான் இருக்கும் கையில் ...
                                           காலம் மாற எல்லாம் மாறும் ஆனால் பண்பாடும்

மாறுமோ ?  
                           இன்றைய ஜனம் பணம் பின்னல் போய் போய் பிணம் போல வாழ்கை நடத்துகிறோம் ....
யாருக்கும் எதை பற்றியும் கவலை இல்லை ...
கிழவிகள் கூட கதை சொல்ல தயாரில்லை  .. அவர்களின் சீரியல் மோகத்தில் ....
உலகமும்  அன்றும் இன்றும் சுழன்று கொண்டுதான் இருக்கிறது .. ம்ம்ம்ஹம்ம்








2 comments:

  1. எவ்வளவு அழகாய் சொன்னீர்கள்!!! இப்பொழுதும் என் பள்ளிக்கூட விடுமுறை நாட்களை நினைத்தால் இந்தக்கால சிறுவர்கள் எவ்வளவாய் பல நல்ல விஷயங்களை இழந்திருக்கின்றாகள் என்பது வேதனைக்குரிய விஷயமாய் தோன்றுகிறது ....

    ReplyDelete