மாட்டுப்பொங்கல் .............
சிலு சிலுக்கும் நினைவலைகள புறந்தள்ளமுடியல ....
அப்போ எல்லாம் எங்க கிராமத்து வீட்டில் ஏகப்பட்ட மாடுக
பசு , காளை ன்னு களைகட்டி நிக்கும் !
வீட்டுக்கு முன்னே தனிய கூறுவோம் பொங்கல ...
அம்புட்டு மாடுக இருக்கும்
எனக்கு மாட்டுப்பொங்கல்தான் ரொம்ப புடிக்கும் எப்போவும்
சின்ன வயசுல மணி வாங்க நானும் ஒட்டிகிட்டு ஓடிருவேன் ....
அதுல குடலை மணி ன்னு ஒன்னு இருக்கும் .. அது சவுண்டே வித்தியாசமா இருக்கும் ...
அது தான் நிறையா வாங்குவேன் ...
ஏர் மாட்டுக்கு தனியா மணி ,வண்டி மாட்டுக்கு சரமணி ன்னு நிறையா போவும் பில்லு
மாட்டு கொம்புக்கு வர்ணம்தான் .. ஆனா ஒரு சில வருஷம் கழிச்சு தான் வர்ணம்பூசுறது கொம்புகளில் ஒரு மாதிரி சுறு சுறுன்னு இருக்கும், மாடுங்க மரத்துல கொம்பை தெறிக்கும்ன்னு தெரிஞ்சிது .....
அப்புறம் காவிதான் .......
வீட்டுக்கு ஒரே பையன்றதால போட்டி யாருமில்ல .... வேலை ஆளுங்கதான் இருப்பாங்க
முன்னமே ஓடைக்கு போயி நல்ல வைக்கோல் பிரிய பிரிய தேச்சு குளிப்பாட்டுவோம்
மாடு சுகமா நிக்கும் போது திமிலை கட்டி புடிச்சிக்குவேன் ......
அப்புறம்தான் அலங்காரம் எல்லாம் ......
பிளாஸ்டிக் பூவெல்லாம் இல்ல, மாவிலை மாலைதான் .....
காவில கை நணஞ்சு மாட்டு உடம்புல நம்ம கையை அச்சு வைக்கிறது செம்ம ஜாலியா இருக்கும் .........
அந்த ரெண்டு நாளும் மாடுங்க செம்ம தீனி செம்ம ஓய்வு ....
கட்டியும் போட மாட்டோம், ஊரு திரிஞ்சிட்டு எல்லாம் சாவகாசம வந்து படுத்துக்கும்
இரவு முழுக்க மணி சத்தம் கேட்டுகிட்டே இருக்கும், அதை வச்சு எந்த மாடு தலையாட்டுதுன்னு யோசிச்சிகிட்டே தூங்கிருவேன் ...
அம்மா நிறய்ய்யா பொங்கல் ,,,,, வைப்பாங்க ..ஆனா மிச்சமே ..இருக்காது . தெரியாம கொண்டு போயி மாடுகளுக்கு குடுத்துருவேன்
அம்மா கேட்டா பதிலே சொல்ல மாட்டேன் .... மொறச்சிக்கிட்டே போய்டுவாங்க ......
மாடுங்க மேல அம்புட்டு பிரியம் எனக்கு ..... ஹ்ம்ம் .. அதுக்காகவே மாட்டு வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன்
முதநாளு மாடுங்க செம்ம தாண்டவம் ... அப்புறம் பழகிருச்சு
முகதடிய தூக்கி வச்சு பூட்டாங்கையிரு போட்டுட்ட மாடுக செட் ஆய்டும் எனக்கு
அதெல்லாம் ஒரு காலம் ........ அதுக்கு அப்புறம் நடத்து எல்லாமே சோகம்தான் ...சொல்லுறதுக்கு மனசு இல்ல
இப்போ எல்லாம் ஊருக்கு/ வெளில போவும் போது எங்கியாவது அடிமாடுகள் போற லாரிய பாத்தா தலைய குனிஞ்சுக்குவேன்
வெட்கம் மட்டும் காரணமில்ல கண்ணீரும் ....
அந்த மாடுக கண்ணில் இருக்கும் வெறுமை ஒருவித ஏக்கம் எந்த விவசாயியும் நொறுங்கித்தான் போவான் ..
இன்னைக்கு மாடுகளுக்கு நமக்குமான தொடர்பு "பீப் " திங்கிறதுல தான் இருக்கு .... கொடுமைதான்
ஒரு விவசாயி குடும்ப புள்ளையா எந்த அளவுக்கு மாடுக நெருக்கமின்னு அதுலேர்ந்து வந்த எல்லோருக்கும் தெரியும் ....
காலம் எல்லா வளர்ச்சியையும் தருது .. அதே நேரத்துல ஒரு அழிவின்மேல் , ஒரு சுயநலத்தின் மேல் அந்த வளர்ச்சி இருக்குதுன்ற உண்மைய நாம எப்போதும் மறுக்க முடியாது !

No comments:
Post a Comment