Saturday, 2 June 2012

கருமை பூத்து கிடந்த
ஓர் இரவில் 
எனது வெளிச்சத்தை எங்கோ 
தொலைத்துவிட்டேன் ;

அள்ளிச்சேர்க்க முனைகையில் 
மெதுவாய் தழுவிகொண்டது 
இரவின் வாசம்; 

நெகிழ்ந்து பரவிய வாசத்தில் 
கரும் பூக்களின் 
ரகசியம் கண்டேன் ;

கைநீட்டி பறித்துவிட முடியாமல் 
தகித்து கொண்டிருந்தது 
இரவின் அடர்த்தி ;

மெல்ல மெல்ல ஊர்ந்து ஏறும் 
இரவின் வாசத்தை
துடைத்துவிட  முடியாமல்
திணறிக் கொண்டிருக்கும் வேளையில் ;

எனது வெளிச்சத்தின் மீது வழிந்துக்  கொண்டிருந்தது
இரவு ..... 

No comments:

Post a Comment